2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 உழவு இயந்திரங்கள் மீட்பு

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்

அனுமதிப்பத்திரத்தை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 உழவு இயந்திரங்கள் அக்கரைப்பற்று பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இன்று (07) கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காடு மற்றும் தீகவாபி பிரதேசங்களில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீலின் பணிப்புரைக்கமைவாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதன் பிரகாரம் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த உழவு இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை மீறி வேறு பகுதிகளில் மண் அகழ்வில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன.

இக்குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான் நளினி கந்தசாமி, மணலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், உழவு இயந்திரங்களையும் சாரதிகளையும் பிணையில் விடுதலை செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X