2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று அம்பாறை வீதி இலுக்குசேனை வயல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையைமீறி உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் ஆற்றுமணல் அகழ்ந்து ஏற்றிய நபரொருவரை அம்பாறை விசேட பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (05) மாலை கைது செய்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.

குறித்த நபரை நாளை (07) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  பொலிசார் மேலும் தெரிவித்தனர்.;

இதேவேளை,தீர்வை செலுத்தப்படாமல் சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த நபரொருவரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (05) மாலை கைதுசெய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை-5ஆம்பிரிவு சம்புக்களப்பு வீதியில் வைத்து மேற்படி நபரை கைது செய்ததாகவும் அவரிடமிருந்து 18 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் நேற்றிரவு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கைதானவர்  39 வயதுடைய அட்டாளைச்சேனை-07 ஆம்பிரிவு றகுமானியாபாத் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X