Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 26 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற முயன்ற நால்வருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரு சரீரப் பிணையில் செல்லுமாறு விடுவித்ததுடன், வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த குற்றவாளிகள் நால்வரையும், நேற்று சனிக்கிழமை (25), நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையகத்தின் புலனாய்வுப் பிரிவினராலும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்நால்வரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன் மின்மாணியில் குளறுபடிகளை மேற்கொண்டு மின்சாரம் பெற்றுக்கொண்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .