2025 ஜூலை 16, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

அம்பாறை, திருக்கோவில் காயத்திரி கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (13) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்களும் 01 ஆணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை இன்று(14) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .