2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சத்துணவு வழங்கும் திட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கல்வியமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் சகல பாடசாலைகளிலும் சத்துணவு வழங்கும் திட்டம் நேற்று (11) நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை அல் – ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் மௌலவி யூ.எம்.நியாஸி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சத்துணவுகளை வழங்கி வைத்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 2 முதல் 5 வரையான மாணவர்களுக்கு மாத்திரம் இந்த சத்துணவுகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் தரம் 1 மாணவர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கரைப்பற்று கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் மௌலவி யூ.எம்.நியாஸி இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X