2025 ஜூலை 16, புதன்கிழமை

சந்தைக் கட்டடத்தை பாவனைக்கு விடுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை, நற்பிட்டிமுனைக் கிராமத்தில் நெக்டப் திட்டத்தின் கீழ் 02 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டடத்தை பாவனைக்கு விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சந்தைக்கட்டம் கடந்த 2010.04.04 அன்று திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சந்தைக் கட்டடம் பாவனைக்கு விடப்படாமல், இன்றுவரை மூடப்பட்டுக் கிடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சந்தைக்கட்டடம் பாவனைக்கு விடப்படாமை தொடர்பில் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியிடம் இன்று திங்கட்கிழமை கேட்டபோது, 'கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் நற்பிட்டிமுனை சந்தைக் கட்டடம் உள்ளது. அரசாங்க மதிப்பீட்டைச் செய்து சந்தைக் கட்டடத்திலுள்ள கடைகளுக்கு இரண்டு தடவைகள் கேள்விமனுக் கோரியுள்ளோம். இங்குள்ள கடைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு எவரும் விண்ணப்பம் செய்யவில்லை. இதனாலேயே, திறந்து வைக்கப்பட்ட இந்தச் சந்தைக்கட்டடம் தற்போது  மூடிய நிலையிலுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X