Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக அமைப்பாளர் தலைமையிலான அதிருப்தி குழுவினருக்குமிடையில் நேற்று சனிக்கிழமை இரவு சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது பாலமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரம் விவசாய மற்றும் உட்கட்டமைப்பு ரீதியலான அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு மற்றும் பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தின் குறைபாடுகள் மற்றும் கல்வி அபிவிருத்தி, தொடர்பாகவும் இக்குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.
இக்குழுவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர், எதிர்காலத்தில் மின்ஹாஜ் மகாவித்தியாலயம் உட்பட பாலமுனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பில் தன்னால உதவிகளை வழங்குவதுடன் பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தியல் பிரதேச வேறுபாடின்றி தான் முன்னின்டு பல உதவிகளை செய்து தருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025