2025 மே 21, புதன்கிழமை

சமூகத்தின் வழிகாட்டி ஊடகவியலாளர்களே: முஸ்தபா

Gavitha   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஊடகவியலாளர்கள் சமூகத்தின் வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று அக்கரைப்பற்று, கல்முனை முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியாலாளர் போரத்தின் அங்குராப்பண பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய அரசாங்கம் பல சலுகைகளை வழங்கி, அவர்கள் சுதந்திரமாக செயற்டுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. சமூகத்தில் முதலிடம் வகிக்கின்ற ஊடகவியலாளர்களிடத்தில் எப்போதும் ஒழுக்கம் காணப்பட வேண்டும்.

நாட்டுக்கு மக்களுக்கு எப்போதும் உண்மையான பணியை வழங்குவது தான் ஒரு சிறந்த ஊடகவியலாளருக்குரிய பண்பாகும். ஊடகவியலாளர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஒழுக்கம் தவறக் கூடாது' என்று அவர் அதன்போது தெரிவித்தார்.

இதன்போது, 2016ஆம ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக தலைவராக எம்.ஏ. பகுறுதீனும் செயலாளராக எம்.எஸ். சஹாப்தீனும், பொருளாளராக யூ.எல். மப்றூப், அமைப்பாளாராக யூ.ல். றியாஸ் உட்பட 13 பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .