2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சமாதான தூதுவர் விருது

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் சமாதான தூதுவர் விருது, இவ்வருடம் சமூக நல்லிணக்கத்துக்காக ஆற்றிய பணிகளுக்காக கல்முனை பிராந்திய சாரண ஆணையாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வைபவம் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை  சமாதான கற்கைகளுக்கான நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் மற்றும் பிரபல சமூக சேவையாளர் எஸ்.எம். இப்றாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .