2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சமாதானத்துக்கான சமயங்கள்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இலங்கைப் பேரவையின் ஏற்பாட்டில் சமாதானத்துக்கான சமயங்களின் மூன்று நாள் வதிவிட முகாமின் இறுதிநாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (13) கதிர்காமத்தில் நடைபெற்றது.

இலங்கைப் பேரவையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் அதி வண. பெல்லன்வில விமலரத்ன தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த வதிவிட முகாமுக்கு வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சர்வ சமயங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இம்முக்கியமான பிரதான மாநாட்டிலே பேரவையின் பிரதித்தலைவரும் இன்றைய நல்லாட்சியின் ஸ்தாபகருமான மறைந்த வண. மாதுலுவாவே சோபித தேரருக்கு அனுதாப அஞ்சலியும் நினைவுப்பேருரையும் அனைத்து மதத் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இதேவேளை, பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X