2025 மே 22, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் ஆடைத்தொழிற்சாலை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கூடிய விரைவில் நடைபெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலை முதலீட்டாளர்கள் மற்றும் அம்பாறை கட்டடத் திணைக்களத்தின் உயர்மட்ட பொறியியலாளர் குழுவினருடன் கலந்துரையாடி, அதற்கான திட்டவரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
 

இங்கு ஆடைத் தொழிற்சாலை நிறுவப்படும் பட்சத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X