2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பு

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல். அப்துல் அஸீஸ்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சு ஊடாக  நிவாரண உதவிகள் கிடைக்காத குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு  சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான  வாய்ப்பு  புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில்,இதுவரை காலமும்  சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்கள்  பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று  பூர்த்தி செய்து  எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர்  பிரதேச செயலாளர் அல்லது  வாழ்வின் எழுச்சிப் பிரிவின்  தலைமை முகாமையாளரிடம்  ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது .

அதன் பிரகாரம், கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட  இதுவரை சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத  வறிய  குடும்பத்தவர்கள்  கல்முனை பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று  பூர்த்தி செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு  வாழ்வின் எழுச்சி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .