Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் 24 மணி நேர இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் ட திங்கட்கிழமை தெரிவித்த அவர், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், மாவடிப்பள்ளி, வளத்தாப்பிட்டி மற்றும் மல்வத்தை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட மக்கள் இச் சேவையை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
விபத்தின் போது ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைப்பதற்காக '1990 சுவசரிய' என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவைக்காக தொலைபேசி இலக்கம் 1990 என்ற இலக்கத்தை அழைத்து சரியான விலாசத்தை தெரிவித்து இச் சேவையை மிகத் துரிதமாக பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
மருத்துவ வசதிகள் யாவும் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக 24 மணிநேரமும் இயங்கும் சேவையை பொது மக்கள் பாவனைக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலவசமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சேவையின் மூலமான பயன்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைத்தியசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் நோயாளருக்கு தேவையான துரித சிகிச்சையை வழங்குவதற்கான பணியாளர்களும் இந்த அம்பியூலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
'1990' இவ்வழைப்பை ஏற்படுத்தி தவறான முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் மேலும் தெரிவித்தார்.
28 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
47 minute ago