2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள்

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பி.எம்.எம்.ஏ.காதர்,பைஷல் இஸ்மாயில்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் இன்று(09)  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடைபெற்றது.

பரிசுத்தமான தேசம் ஒன்றை நாளைய சந்ததியினருக்கு உரித்தாக்கும் உயரிய நோக்குடன் முன்னோடியாக அர்ப்பணிப்புடன் தனிப்பட்ட ரீதியிலும் தொழில் சார்ந்த வாழ்விலும்  சிறந்த வெளிப்படை தன்மையுடன்  பொறுப்புக் கூறும் வகையிலும் அர்பணிப்புக் கண்ணோட்டத்துடனும்  இலஞ்சமும்  ஊழலும் அற்ற  கௌரவமான  பிரஜையாக அபிமானத்துடன்  வாழ்வேன் என்றும் சேவையாற்றுவேன் என  நான் திடசங்கற்பத்துடனும்  கௌரவத்துடனும் உறுதியளிக்கிறேன்  என்று அனைவராலும்  சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டது .

இந்நிகழ்வில்,  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அப்துல் ரஹீம்,பீ.எம்.வை.அரபாத்,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன்,நிருவாக உத்தியோகத்தர்  ஜீ .பரம்சோதி  உட்பட அனைத்து  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .

ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் அவரவர் மன சாட்சிப் படி தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை இறை அச்சத்துடன் செய்வதன் மூலம்  எம்மால் வாசிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி உண்மைப் படுத்தப்படும் என கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .