2025 மே 21, புதன்கிழமை

சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள்: பிரேரணை நிறைவேற்றம்

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ், அஸ்லம் எஸ்.மௌலானா

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதற்கிணங்க தீர்வையற்ற சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டுமென கல்முனை மாநகர சபையினால் நேற்று திங்கட்கிழமை (28) மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஊடகவியலாளர்களுக்கான தீர்வை அற்ற மோட்டார் சைக்கிள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டதற்கமைய தீர்வையற்ற சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சம்மேளனத்தின் உப தலைவர் ஏ.எல்.எம். சலீம் தலைமையிலான நிர்வாகிகள் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பரை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மாநகர முதல்வரினால் நேற்று (28) மாலை இடம்பெற்ற சபை அமர்வில் விசேடமாக சமர்ப்பிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
மேலும் இத்தீர்மானத்தினை எழுத்துமூலமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் எனவும் சபையில் ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .