2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சலூன்களுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 13 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில், மாணவர்களுக்கு, அநாகரிகமாகச் சிகையலங்காரம் செய்யும் சலூன்களின்  அனுமதிப்பத்திரம், உடனடியாக இரத்து செய்யப்படுமென, காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் அறிவித்துள்ளார்.

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல், நகர முதல்வர் தலைமையில், நகரசபை மண்டபத்தில், நேற்று (12) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த முதல்வர், வெளியுலக வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படும் பள்ளிப்பருவப் காலத்தில் கடைப்பிடித்தொழுக வேண்டிய பாடசாலை ஒழுக்க விழுமியங்களை, நாகரிகமென்ற பெயரில் இடம்பெறும் நவீன சிகையலங்காரங்கள் இல்லாதொழித்து விடுகின்றனவெனக் கூறினார்.

எனவே, காத்தான்குடி நகரசபைப் பிரிவில், இந்த சமூகப் பொறுப்பை மீறும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதிப் பத்திரம், உடனடியாக இரத்து செய்யப்படுமென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X