2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருது வீட்டில் 15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது மாவடி வீதிப் பகுதியில், நேற்று (29) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,   15 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியுடன்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில்,  உப பொலிஸ் பரிசோதகர் அனுஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தேடுதல் முன்னெடுத்தனர்.

இதன்போது, இரு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் இரண்டாம் மாடியில் இருந்து  நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவ்வீட்டில் குடியிருந்த ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X