2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுமியை வெட்டி நபர் உயிரிழப்பு

வி.சுகிர்தகுமார்   / 2018 மே 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயது சிறுமியொருவரின் கழுத்தை வெட்டிய நபர், தனக்குத் தனே தீ மூட்டிக்கொண்ட சம்பவம், அம்பாறை, அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில், நேற்று (25) காலை இடம்பெற்றுள்ளது என்று, அக்கரைப்பற்று ​பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, அங்கு வருகை தந்த தாயின் 2ஆவது கணவர், சிறுமியின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு, தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தீக்காயங்களுக்குள்ளான நபரும், அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

தாயின் இரண்டாவது கணவர், தன்னுடன் தகாத ​முறையில் நடப்பதற்கு முயன்றதாக, தன்னுடைய தாயிடம் முறையிட்டதாலேயே,  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X