Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 12 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
12 நாள்களுக்கள் பொத்துவில் பிரதேசத்தில் 54 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர். ஏ.யூ. அப்துல் சமட், இன்று (12) தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்ந 42 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.
பொத்துவில் பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம், பொலிஸார், விளையாட்டு கழங்கங்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்துறை சார் அனுகுமுறை ஊடாக டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டெங்க நுளம்பு பரவக் கூடிய இடங்களாக அடயாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் புகை விசிறி வருவதாகவும், தெரிவித்தார்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம் பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. இது தொடர்பாக மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி ஊடாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலணி மற்றும் சுகாதார வைத்தியதிகாரிகள் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், சுகாதார வைத்தியதிகாரி வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago