Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களைத் தொற்றா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு, சுகாதாரத் துறையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான சுகாதாரத் துறையினருக்கான கருத்தரங்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுகாதார வைத்தியதிகாரி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஒரு நாட்டில் சுகாதாரத் துறை முக்கிய பங்கு வகிப்பதால் மக்கள் மத்தியில் அவை அத்தியவசியத் தேவையாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள், திறந்த மனதுடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
திராய்க்கேணிப் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இம்மக்களுக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் சுகாதார நடைமுறை தொடர்பாக அறிவூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் சுகாதாரத்துறை இன்று பல வழிகளிலும் முன்னேறி, மக்களுக்காக அதன் சேவையை இலகுவாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதாகவும் இதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 May 2025
04 May 2025