Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மே 27 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால், ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்கள் அண்மைய காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, கட்சித் தலைவர் வேந்தன் இன்று (27) தொிவித்தார்
இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இக்கட்சியின் செயலாளர் நாயகம் கதிர், கடந்த 14ஆம் திகதி பயங்கரவாதப் புலனாய்வுகள் பிரிவின் 04ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு, காலை முதல் மாலை வரை முழுநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித் அவர், மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்ற நேரங்களில் தவறாமல் பிரசன்னமாக வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்து அனுப்பப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இக்கட்சியின் தலைவரான தனக்கு, திங்கட்கிழமை (28) காலை 04ஆம் மாடிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு எழுத்துமூல அழைப்பாணை பிறப்பித்து உள்ளததாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக போராளிகள் கட்சி, இந்நாட்டு சட்டத் திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், போருக்குப் பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .