Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலான
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் சனிக்கிழமை (12) இரவு உயிரிழந்துள்ள அதேவேளை, 59 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மத் சபீக் முஹம்மத் நுஷாக் (வயது 11) என்ற சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை தெற்கு மற்றும் வடக்குச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு அவசர நடவடிக்கை எடுப்பதற்காக சாய்ந்தமருதுப் பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
கல்முனை மாநகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் இணைந்து சில அவசர நடவடிக்கையை எடுக்கவுள்ளன.
இந்நிலையில் பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் வழங்குதல், பொதுச்சுகாதார பரிசோதகர்களும்; பொலிஸாரும் இணைந்து வீடுகளுக்குச் சோதனை மேற்கொள்ளுதல், நுளம்புகள் பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025