2025 மே 22, வியாழக்கிழமை

தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மு.கா.வில் இணைவு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தேசிய காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்கள் உட்பட 15 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை (24)  இரவு இணைந்துகொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் இணைப்பாளரும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான  எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தலைமையிலான குழுவினர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் மு.கா.வின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீரை  அட்டாளைச்சேனைக் காரியாலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் பின்னரே இவர்கள் மு.கா.வில் இணைந்துகொண்டுள்ளனர்.  

தேசிய காங்கிரஸ் கட்சிக்காகவும் அதன் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்காகவும் கடந்த சில வருடங்களாக இறக்கமாம் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சிப் பணியை முன்னெடுத்த மிக முக்கிய உறுப்பினர்களான எம்.ஏ.எம்.பஜீர், ரீ.எல்.நிகார்டீன், எஸ்.றபியுடீன், ஏ.அமீன், எம்.மஹ்சுக், எம்.எம்.பாறூக், எம்.ஆரீப், பௌருடீன் உள்ளிட்டோரே மு.கா.வில் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X