2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திண்மக்கழிவு அகற்றுவதற்காக சுமார் 02 கோடி ரூபாய் செலவு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் திண்மக்கழிவு அகற்றுவதற்காக வருடமொன்றுக்கு சுமார் 02 கோடி ரூபாய் செலவாகுவதாக அப்பிரதேச சபைச் செயலாளர் எம்.முஹம்மட் இர்பான் தெரிவித்தார்.

திண்மக்கழிவு அகற்றல் தொடர்பான கருத்தரங்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

திண்மக்கழிவு அகற்றும் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கையில் தொழில்நுட்ப வளர்ச்சி குறைந்து காணப்பட்டாலும், உள்ளூராட்சிமன்றங்கள் சிறந்த முறையில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தைச் செய்கின்றது.

திண்மக்கழிவு அகற்றலின்போது, மீள்சுழற்சி முறையிலான உற்பத்தியை மேற்கொள்வதால் அதன் மூலம் கூடுதல் வருமானத்தை பெற முடியுமெனவும் அவர் கூறினார்;.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X