2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று (22) தெரிவித்தார்.

இதன்போது,ஒலுவில் வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மரநடுகை வைபவத்தை உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இஸ்லாமிய கற்கைககள் அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் காலை 08.30 மணிக்கு மர்ஹும் கலாநிதி அஷ்ரப்பை நினைவு கூரும் வைபவம் நடைபெஙவுள்ளதுடன், சம்மாந்துறை விஞ்ஞான பீடத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நூலகக் கட்டடத் தொகுதியும் திறந்து வைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X