2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

துப்பாக்கி வைத்திருந்த இளைஞனுக்கு சரீர பிணை

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை,பொத்துவில் ஹிஜ்ரா நகர் ஜெய்க்கா வீட்டுத்திட்ட பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியும் வெடி மருந்து நிரப்பப்பட்ட தோட்டா ஒன்றையும் வைத்திருந்த 19 வயது இளைஞரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம்.ஹில்மி இன்று வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளார்.

பொத்துவில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி முன்னிலையில் இன்று (17) ஆஜர்செய்தபோது 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இவ் வழக்கு விசாரணையை நீதிவான் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X