2025 மே 21, புதன்கிழமை

தையல் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிழ் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரேதேச நட்பிட்டிமுனை கிராமத்தில்  தையல்  பயிற்சியை பூர்த்தி  செய்த  40 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள்  வழங்ககும் நிகழ்வு சனிக்கிழமை(2) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய   மண்டபத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டில்  நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினால் நடத்தப்பட்ட இப் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த 40 யுவதிகளுக்கு தையல் இயந்திரமும் 100 யுவதிகளுக்கு  பயிற்சி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளரும் அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சி.எம்.ஹலீம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்ரூப், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனங்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைதீன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X