Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் உள்ள 1585 ஏக்கர் விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று வட்டார வனவள காரியாலயத்துக்கு முன்னால் அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் காரியாலயத்தை மறித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சுமார் 50 வருடங்களாக திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வட்டமடு கண்டத்தில் 445 ஏக்கரிலும் முறாணவெட்டி கண்டத்தில் 400 ஏக்கரிலும் வேப்பையடி கண்டத்தில் 202 ஏக்கரிலும் வட்டமடு புதுக்கண்டத்தில் 180 ஏக்கரிலும் தோணிக்கல் தென்கண்டத்தில்(கொக்குழுவ) 358 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொண்டு வருவதாகவும் 1985ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் முறையாக உத்தரவு பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 1970ஆம் ஆண்டு முதல் விவசாயிகளாகிய நாங்கள் சகல விதமான அரசாங்க வரிகளும் செலுத்தி பற்றுசீட்டும் பெற்று வந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும்,பயங்கரவாத காலத்திலும் ஒவ்வொருபோகமும் விவசாயம் செய்து வந்ததாகவும் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் சம்மந்தமாக சகல அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பலமுறை அறிவித்திருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்ட 5 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
59 minute ago
1 hours ago