2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் காணியுரிமை பத்திரங்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் காணியுரிமை பத்திரங்கள் இன்றி வாழ்நது வந்த சுமார் 312 பேருக்கு நேற்று வெள்ளிக்கிழமை காணியுரிமை பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இதில், அமைச்சர் தயாகமகே  பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொது மக்களுக்கான காணியுரிமை பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இக்காணியுரிமை பத்திரங்களானது 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது  மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களான தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு,சாகாம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 300 பேருக்கு காணியுரிமை பத்திரமும் 12பேருக்கு காணியளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X