2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருக்கோவிலில் 771 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இந்த நாட்டில் யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சொந்த மண்ணில் தமிழ் மக்கள்  சரியான முறையில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலப் பிரிவில் இன்னும் 771 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ளதாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டி.கலையரசன் தெரிவித்தார்.

திருக்கோவிலிலுள்ள தம்பிலுவில் கலைமகள் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'திருக்கோவில் கல்வி வலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் இயங்கும் பாடசாலைகள் முறையாக செயற்பட முடியாமலுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சாகாமம், கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களிலுள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. இதற்குக் காரணம் அக்கிராமங்களில் முறையான மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், முறையான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் செய்யப்படாமையே ஆகும்.

இதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். தற்போது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலரை சந்தித்து எமது பிரதேச நிலைமைகளை எடுத்துக்கூறியுள்ளோம். தமிழர் பிரதேசங்களில் பல அபிவிருத்திகளை முன்னெடுக்க எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X