2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருக்கோவிலில் சோளன், மிளகாய் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் சோளன், மிளகாய், நிலக்கடலை ஆகியவற்றின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ.இஸ்மாலெப்பை தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இந்த வருடம் சோளம்; சுமார் 50 ஏக்கரிலும் நிலக்கடலை 100 ஏக்கரிலும் மிளகாய்  10 ஏக்கரிலும் செய்கை பண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பழ உற்பத்திகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட் சாகாமம் கிராமத்தில் சோளன் அறுவடை விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்துக்கு குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் இவ்வருடத் திட்டத்தில் திருக்கோவில் பிரதேச விவசாயிகளை மேம்படுத்தும் வகையில் மிளகாய் மற்றும் மா அரைக்கும் இயந்திரங்கள், தெளிகருவிகள் என்பனவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X