2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திருக்கோவிலிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியிலுள்ள மாடி வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (26) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அலுமாரிகளில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் மரண வீடொன்றுக்காக மட்டக்களப்புக்குச் சென்றிருந்த வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த வீட்டுக்கு அருகிலுள்ள திருக்கோவில் தபாலகத்தில் காணப்பட்ட அனைத்து அலுமாரிகளும் மேசைகளும்  உடைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X