2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திருக்கோவில் வைத்தியசாலை தரம் உயர்த்தப்படும்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையிலுள்ள குறைகளை நிவர்த்திசெய்து ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையின் அவசரப் பிரிவு புதன்கிழமை (04 மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களில் தரமான வைத்தியசாலைகள் காணப்படுகின்றபோதிலும், திருக்கோவில் வைத்தியசாலை சிறிய வைத்தியசாலையாக அன்று முதல் இன்றுவரை இருப்பது கவலையளிக்கின்றது. ஆகவே, எனது பதவிக்காலத்தினுள் திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையை  ஆதார வைத்தியசாலையாக  தரம் உயர்த்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X