2025 மே 19, திங்கட்கிழமை

துறைநீலாவணையை கல்முனை பொலிஸ் பிரிவுடன் இணைக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

துறைநீலாவணைக் கிராமத்தினை கல்முனை பொலிஸ் பிரிவுடன் இணைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் துறைநீலாவணைக் கிளையின் தலைவர் ஆ.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜர்  இன்று (19) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எமது கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்டது. இங்கு நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ள நிலையில் நீண்ட காலமாக பொலிஸ் பிரிவானது கல்முனையின் கீழ் இருந்தது. ஆனால், கடந்த ஆட்சியின் போது இக்கிராமத்தினை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எமது ஊரிலிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கான தூரம் கல்முனையை விட அதிகமாவதுடன் கல்முனையில் சந்தை வசதிகள், வைத்தியசாலை, பாடசாலை, வர்த்தக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் என்பன தாராளமாக உள்ளன.

எனவே, எமது தறைநீலாவணைக் கிராமத்தினை மக்களின் நலன் கருதி கல்முனை பொலிஸ் நிலையத்தோடு மீண்டும் இணைப்பதற்கு ஆவன செய்து தரும் படி வேண்டிக் கொள்கின்றோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X