Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ரீ.கே. றஹ்மத்துல்லா
முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில்சார் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று வியாழக்கிழமை (14) மகஜர் அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பொதுநிர்வாக அமைச்சின் 14ஃ2013ஆம் இலக்க சுற்றுநிருபம் நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்படுவதனால் கிழக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களின் சிறப்பு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இது விடயமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
முகாமைத்துவ உதவியாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்திருந்தோம். இம்முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழுவின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததனால் பல நினைவூட்டற் கடிதங்களை அனுப்பி இருந்தும் அதற்கும் எதுவித முன்னேற்றமும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது குறித்த சுற்றுநிருபத்தினை நடைமுறைப்படுத்துவதனை கிழக்கு மாகாணத்தின் மேலும் பல அலுவலகங்கள் தவிர்த்து வருகின்றமையையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எனவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொண்டு நியாயம் பெற்றுத்தருவதற்கும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரச அலுவலகங்களிலும் இச்சுற்று நிருபத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆவணசெய்து தரும்படி கேட்கப்பட்டுள்ளது.
28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago