2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூன் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை சாளாம்பைகேணி பிரதேசத்தில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்க முற்பட்டு கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ. பேரின்பராஜா, இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

சவளக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த சாளாம்பைகேணி-01ஆம் பிரிவு திவிநெகும பயனாளிகளுக்கான கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென நுழைந்த நபர் ஒருவர், சம்மந்தப்பட்ட திவிநெகும உத்தியோகத்தருக்கு மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து, தாக்க முற்பட்டு இடையூறு விளைவித்துள்ளார்.

இச் சம்பவத்தினால் மன உளைச்சலுக்குள்ளான திவிநெகும உத்தியோகத்தர், சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம் முறைப்பாட்டையடுத்து சவளக்கடை பொலிஸாரால் 45 வயதுடைய மேற்குறிப்பிட்ட நபர், நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை, கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ. பேரின்பராஜா முன்னிலையில் இன்று (11) ஆஜர்செய்த போது எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X