Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சவளக்கடை சாளாம்பைகேணிப் பிரதேசத்தில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்க முற்பட்டு கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் விடுவித்துள்ளார்.
சாளாம்பைகேணி -10ஆம் பிரிவு திவிநெகும பயனாளிகளுக்கான கூட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றபோது, அங்கு திடீர் என்று நுழைந்த ஒருவர் சம்மந்தப்பட்ட திவிநெகும உத்தியோகஸ்தர் மோசமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், அவரைத் தாக்கவும் முற்பட்டு கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த திவிநெகும உத்தியோகஸ்தர் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாட்டை அடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவ்வழக்;கு விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே, சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .