2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தகரக் கொட்டில்களில் கற்றல் நடவடிக்கையை தவிர்க்கவும்

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

தற்போது நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் கழுத்துப்பட்டி, முழுக்கை கொண்ட மேற்சட்டை மற்றும் சப்பாத்து அணிவதைத் தற்காலிகமாக தவிர்க்குமாறு  அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஷிம், இன்று திங்கட்கிழமை பணித்துள்ளார்.

அத்துடன், தகரக் கொட்டில்களில் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மேற்படி வலயப் பாடசாலைகளின்; அதிபர்களுக்கு அவர் பணித்துள்ளார்.  

இன்று திங்கட்கிழமை முதல் வெப்பமான காலநிலை சீராகும்வரை இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்கள் சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், வெள்ளிக்கிழமை (06) விசேட சுற்றுநிரூபம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X