Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தபால்த் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தபால் திணைக்களத்துக்கு புதிய ஆளணியினரை சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ரோஹன அபயவர்த்தன தெரிவித்தார்.
141ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி கிழக்கு மாகாண பிரதான நிகழ்வு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் தபாற்றுறை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 2ஆம் இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தபால் திணைக்களம் நவீன பரிணாமத்துடன் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை மேலும் வளர்ச்சிடையச் செய்ய நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சிறந்த அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கள், அஞ்சல் சேவையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago