Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Sudharshini / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை, தம்பட்டைக் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்கவினால் புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது.
திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளால் பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களில் விதைக்கப்படும் நெல்லைக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்தி விநியோகிக்கும் நிலையமாக இக்களஞ்சியசாலை செயற்படவுள்ளது.
இது விவசாயிகளின் நெல் சந்தைப்படுத்தும் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பெரும்போக அறுவடையை முடித்த விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையில் நெற்கொள்வனவு புதன்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்களஞ்சியசாலையில் 15 இலட்சம் கிலோகிராம் நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வசதி உள்ளது. இந்நிலையில் விவசாயி ஒருவரிடமிருந்து 2,000 கிலோகிராம் நெல் படி 750 விவசாயிகளிடம் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.
சிவப்பு அரிசி நெல் 38 ரூபாய்க்கும் கீரிச் சம்பா 50 ரூபாய்க்கும் சம்பா 41 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதாக மேற்படி களஞ்சியசாலையின் பொறுப்பாளர் டபிள்யூ.ஈ.பி.அனுரகுமார தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 hours ago
21 May 2025