Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட தமிழ் மொழி தொண்டராசிரியர் குழுவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (23) கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது, எவ்வித ஊதியமுமின்றி கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 109 தமிழ் மொழி ஆசிரியர்கள் கடமையாற்றி வந்த நிலையில், இன்று அவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
இதனால், இவர்கள் பாரிய துன்பத்தை எதிர்நோக்கி வருவதாக அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்க தலைவர் ஐ.எம்.பௌசி, முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்திற் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,
இது தொடர்பான உடன் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில், விசேட கவனத்தை செலுத்தி உரிய அதிகாரிகளுக்கு முழுமையான தரவுகளை திரட்டும் படி உத்தரவிடுவதாகவும் மிகக்குறுகிய காலத்தில் இத் தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
3 hours ago
8 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Sep 2025