2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

சுற்றுலா விசாவில் வந்து வேளாண்மை வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24, 25 வயதுகளையுடைய இருவரை அம்பாறை, சம்மாந்துறை வயல்வெளியில் புதன்கிழமை (10) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் குறித்த வயல்வெளியில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் ஈடுபடுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த வயல்வெளிக்குச் சென்று இவர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X