Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் தமிழரசுக் கட்சியின்; கிளையை நிறுவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசனிடம் கட்சி ஆதரவாளர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்காலத்திட்டம் மற்றும் நிலங்கள் பறி போகின்றமை தொடர்பான கலந்துரையாடல், மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனுக்கும்; ஆலையடிவேம்பு பிரதேசத்தின் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் கிளை இங்கு இல்லாமையினால், கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும் கட்சி ஆதரவாளர்கள் இதன்போது கூறினர்.
மேலும், இங்கு கட்சியின் கிளை இல்லாமையினால், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர் ஒருவரை தேர்தலில் களம் இறக்கமுடியாமல் போனது. எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் போட்டியிட வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் கட்சிக் கிளையை இப்பிரதேசத்தில் அமைப்பதன் மூலம்; கட்சியையும் வளர்க்கமுடியும்.
எனவே, இங்கு தமிழரசுக் கட்சிக் கிளையை நிறுவுவதற்கு கட்சித் தலைவர் மற்றும் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு பதிலளித்த மாகாண சபை உறுப்பினர், 'இது தொடர்பில் கட்சியின் தலைமைப்பீடத்துக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025