Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்காக, எமது கட்சியின் தலைமைகள் அயராது பாடுபட்டுள்ள இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள், அபிவிருத்திக்கான போதிய நிதிகள் ஆகியவற்றை வழங்காது, அரசாங்கம் துரோகம் இழைக்குமானால், இந்த ஆட்சியைத் தோற்கடிக்கவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பொன்று, நேற்று முன்தினம் (19) தவிசாளர்
இ.வி.கமலராஜன் தலைமையில், திருக்கோவில் மெதடிஸ் த மிஷன் தமிழ் மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்காது தடுக்கும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக போராடி வருகின்றது என்று கூறினார்.
கடந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக விளங்கி இருந்தார்கள் என்றும் அவர்களின் சக்தியை, சர்வதேசம் உட்பட அனைவரின் உதவியுடன் உடைத்த போது, தமிழ் மக்களின் சக்தி, கேள்விக்குறியாக இருந்தது என்றும் கூறிய அவர், அதேபோன்று, இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சக்தியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதனூடாக, தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்காது தடுக்கும் நடவடிக்கைகளில் பேரினவாதக் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறு அந்தக் கட்சிகளின் ஊடுருவலால் அம்பாறை மாவட்டத்துக்குக் கிடைக்கும் ஒரேயொரு தமிழ் பிரதிநிதியும் கிடைக்காமல் போவதுடன், இந்த மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கான குரல் கொடுப்பதற்கு ஒருவரும் இல்லாமல் ஏனைய இனத்தின் ஆண்டான் அடிமையாக, தமிழ் மக்கள் வாழச் செய்யும் சதி வேலைகளில் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago