Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்,எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு எதிராக தவறான செய்தி ஒரு சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்;டமையைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக ஒரு சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில்; பிரதேச சபையின் செயற்பாடுகளை தவறான முறையில் மக்கள் மத்தியில் வெளிக்காட்டும் வகையில் செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பிரதேச சபையை தவறாக சித்தரிக்க முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றதென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது தெரிவித்த பிரதேச சபை உத்தியோகஸ்தர் எம்.எச்.றியால், 'அட்டாளைச்சேனை பிரதேச சபைச் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தனிப்பட்ட காரணங்களை வைத்தே பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சில இணையத்தளங்கள் மற்றம் சமூக வலைத்தளங்களில் தவறாகச் செய்தி பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தவறாகச் செய்தி வெளியிடப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago