Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மே 26 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறை மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளராக திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தைச் சேர்ந்த ரி.மோகனகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மாவட்டச் செயலக த்தில் கடமையாற்றிய கே.பாக்கியராஐ அண்மையில் நகர அபிவிருத்தி அமைச்சுக்குப் பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுச் சென்றதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோகனகுமார், நாளை வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இவர், காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், நாவிதன்வெளி, திருக்கோவில், கல்முனை மற்றும் அம்பாறை போன்ற பிரதேச செயலகங்களில் உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago