Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வெள்ளிக்கிழமை (24) உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த அழகரெத்தினம் நவீனன் உடைய பூதவுடல் நேற்றிரவு (26) இரவு உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸ் மரியாதையுடன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பாண்டிருப்பு பொது மயானத்தில் சடலம் நேற்று (27) நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடுச் சம்பவத்தில் ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகிய 4 பொலிஸார் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதான பொலிஸ் சார்ஜென்ட், ஜனவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த 4 பொலிஸ் அதிகாரிகளினதும் வீடுகளுக்கு பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago