Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
லோ.கஜரூபன்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் அருணன், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அஸார் ஆகியோர் தலைமையில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பொறுப்பதிகாரி விஜயராஜா உள்ளிட்ட பொலிஸார் இணைந்த விசேட தனிப்படை, மேற்படி சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளது.
23 வயதுடைய குறித்த சந்தேகநபர் அக்கரைப்பற்று , கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, திருக்கோவில் சவளக்கடை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், வீரமுனையைச் சொந்த இடமாகவும், விநாயகபுரம் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1,560,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை உருக்கி, ஆரையம்பதி, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, அக்கரைப்பற்று பிரதேச நகைக்கடைகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபரால் களவாடப்படட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது .
சந்தேகநபர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (14) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 May 2025
04 May 2025