2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது:அஸீஸ்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்;.

கடந்த றமழான் காலத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள  முஸ்லிம் பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்களுக்கிடையில் சமூக, பொருளாதார கல்வி மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தினால் (சீமோ) நடத்தப்பட்ட கலாசார வினா, விடை போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று (19) சனிக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரமத அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சமூக சேவை நிறுவனங்கள் தமது செயற்பாடகளை, அரசாங்கத்தின் சட்ட வரையரைக்குள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் சீமோ நிறுவனமானது சமூத்திற்கு தேவையான நல்ல விடயங்களை முன்னெடுத்திருப்பது பாரட்டத்தக்க விடயமாகும்.

இன்று நாட்டில் சிறுவர்களுக்கெதிராக பல வகையான வன்முறைகளும், இன்னல்களும் இடம்பெறுகின்றன. பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது கூடிய கவனம் எடுத்தல் வேண்டும்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் அநியாயங்களுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்படுவேமானால் எதிர்காலத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதிகள் இடம்பெறாது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.எம். தௌபீக், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு முறையே 15 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் பெறுமதிமிக்க பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, 197 மாணவர்களுக்கு ஆறுதல் பணப்பரிசில்களும் வழங்கி, சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X