2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 5 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (02)  இரவு கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதின்றத்தில் ஆஜராகாமல் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பக்கப்பட்டு  தலைமறைவாகி வந்தவர்களை கைதுசெய்யும் பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்போதே குறித்த  நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .